ஜோர்ஜியாவில் பெரும் வாக்காளர் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ட்ரம்ப் தனது கருத்துக்களை சனிக்கிழமையும் தொடர்ந்தார்.

1 week

ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய வாக்கு மோசடி தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்வதற்காக தொடர்ந்தும் இணைந்திருங்கள் என ட்விட்டரின் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு எந்த ஒரு ஆதாரமும் முன்வைக்காத நிலையில் ஜோர்ஜியாவில் கைகளால் வாக்குகள் மீள எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் தானே வெற்றியாளர் என்கிறார் ட்ரம்ப்.

இன்று வெளியிடப்பட்ட எண்ணிக்கை சரியானது என தாம் நம்புவதாகவும்   ஜோர்ஜிய மக்களின் தீவிரமான எண்ணமும் அதுவே என்று ஜோர்ஜிய செயலாளர் பிரட் ரப்பன்ஸ்பெர்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்ஜியாவில் தமது வேட்பாளர் வெற்றிபெறமைத் தொடர்பில் ஏனைய குடியரசுக் கட்சிகாரர்களை போன்று தனக்கும் அதிருப்தி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜோர்ஜியாவை வெற்றிக்கொண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோபைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வாக்கை திருட வேண்டாம் என தெரிவித்து எதிர்ப்பு பேரணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை மனிதர்களினால் இழைக்கப்பட்ட தவறினால் தவிர திட்டமிட்டு மேற்கொண்ட ஒன்று அல்ல என்பதனையும் ஒரு சில வாக்குகள் எண்ணப்படவில்லை என்பதற்காக ப்ரட்டி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதனையும் ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொண்டனர்.

Read next: “கொரோனா” ஆபத்தானது என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப்