தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தருவாயில் ட்ரம்ப்

3 weeks

ஒரு வாரத்திற்கு பின்னர் முதற் தடவையாக ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மக்கள் முன் தோன்றியுள்ளார்.வெள்ளை மாளிகை முன்பாகச் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த ட்ரம்ப் கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டத்தில் இருப்பது தொடர்பில் இங்குத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியில் தனது நிர்வாகத்தின் காலப்பகுதியில் டொனல்ட் ட்ரம்ப் நாடு தழுவிய முடக்கத்தை நிராகரித்திருந்தார்.

இது எந்த ஒரு சூழ்நிலையிலும் இடமபெறாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.இதன் போது தடுப்பு மருந்துத் தயாரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்ததுடன் ஓரளவு தோல்வியை ஏற்றுக்கொண்டவராய் ட்ரம்ப் காணப்பட்டார்.

எந்த அரசாங்கம் வரும் என்று யாருக்கும் தெரியாது.எதிர்காலம் அதனைக் கூறும் என நான் நினைக்கிறேன்.ஆனால் இந்த நிர்வாகத்தில் முடக்க நிலை ஒன்று அமு;படுத்தப்பட மாட்டாது என்பதனை என்னால் உங்களுக்குத் தெரிவிக்க முடியும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 3ம் திகதி தேர்தல் நடைபெற்றதிலிருந்து ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார்.

ட்ரம்பின் இந்த உரைக்கு ஒரு மணித்தியாலத்திறகு முன்னர் அரிசோனாவிலும் ஜோர்ஜியாவிலும் வெற்றிபெற்று மொத்தமாக 306 இருக்கை வாக்குகளைப் பைடன் வெற்றிக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தனது வாக்குகளைத் தேர்தலில் பைடன திருட முற்பட்டதாக ட்ரம்ப் எந்த ஒரு அடிப்படையுமின்றி குற்றஞ்சாட்டினார்.இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ட்ரம்ப் செய்தியாளர்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்காத நிலையில் தனது அரசாங்கத்திலேயே கொரோனாவுககு எதிராகச் சிறப்பான செயற்பாடுகள் இம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 பிஸர் மற்றும் பயோ டெக்கின் தடுப்பு மருந்து அமெரிக்காவில் மிக விரைவில் பயன்பாட்டுககு வர வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

பிஸர் உட்பட ஆறு தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இவற்றில் பல சில உலக நாடுகளில் இறுதிக்கப்பட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

Read next: இன்று பிரித்தானியாவில் கோவிட் இறப்புகள் மீண்டும் உயர்ந்தது