UK: விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பொழுது பயணம் செய்கிறீர்களா-இவற்றை அறிதல் அவசியம்

Oct 29, 2022 02:21 pm

பிரித்தானியாவில் ஒருவர் வாழ்வதற்கு வீசாவை நீடிப்பது அல்லது நிரந்தர வதிவுருமை விண்ணப்பத்தை சமர்ப்பித்து உள்ள நேரத்தில் உள்துறை அமைச்சிடம் இருந்து ஒரு முடிவு வருவதற்கு பல மாதங்கள் அல்லது சில சமயங்களில் பல வருடங்கள் கூட எடுக்கலாம். அதேவேளை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பொழுது விண்ணப்பதாரியின் பாஸ்போர்ட் மற்றும் பயோமெட்ரிக் கார்ட் அவரிடமே திருப்பி கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த சூழலில் அவர் வெளிநாடு பயணிக்க முடியுமா என்பதையே இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது.

விண்ணம் செய்யும் வேளையில் பிரதிகள் எடுக்கப்பட்ட பின்னர் சில காலமாக விண்ணப்ப தாரியிடம் அவருடை ஒரிஜினல் ஆவணங்கள் திரும்பவும் கொடுக்கப்பட்டாலும், 6 ஒக்டோபர் 2021 இல் கீழே, இந்த நடைமுறை ஒரு சட்டமாக அமுலுக்கு வந்தது.

34J. The proof of identity provided under paragraph 34(5), or any other application for permission to stay, will be returned to the applicant whilst their application is being considered, unless the Secretary of State considers it necessary to retain it.

இதன் படி விண்ணப்பம் பரிசீலினையில் உள்ள பொழுது விண்ணப்ப தாரர் தனது அவங்களை தானே வைத்துக்கொள்ள சட்டரீதியாக அனுமதியை வழங்குகிறது.

இந்த சூழலில் ஒருவரின் தாற்காலிய (temporary) அல்லது நிரந்தர (ILR/ SETTLEMENT) வதிவிருமை விண்ணப்பம் பரிசீலனையில் உள்ள பொழுது தன்னிடம் உள்ள கடவுசீட்டை பயன்படுத்தி பயணிப்பதை தவிர்ப்பது பின்வரும் காரணகளுக்காக அவசியமாகிறது:

1.  நீங்கள் பொது பயண வலையத்துக்கு வெளியே பயணித்தால் (outside the Common Travel Area (CTA) – which includes the UK, Republic of Ireland, Channel Islands and Isle of Man) உங்கள் விண்ணப்பம் மீளப்பெறப்பட்டதாக கருதப்படும். இதற்கு காரணம் 6 ஒக்டோபர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமாகும்:

  34K. Where a decision on an application for permission to stay has not been made and the applicant travels outside the common travel area their application will be treated as withdrawn on the date the applicant left the common travel area.

இதன் படி விண்ணப்பதாரர் பொது பயண வலயத்தை வெளியேறும் நாளே அவரின் விண்ணப்பம் மீளப்பெறப்பட்டதாக கருதப்படும் என்று மேலே உள்ள சட்டம் கூறுகிறது. 

உங்கள் கடவுசீட்டை பயன்படுத்தி நீங்கள் பொது பயண வலயத்தை விட்டு வெளியேறும் பொழுது உங்களின்   எந்த விண்ணப்பமும் பரிசீலனையில் இல்லை என்று பொருள் கொள்ளப்படும். அதாவது section 3C leave முடிவுக்கு வந்துவிடும். Section 3C leave என்பது, ஒருவரின் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பொழுது அவர் தனது வீசாவின் கீழ் என்ன உரிமைகள் உள்ளதோ அதன் கீழ் தொடர்ந்து பிரித்தானியாவில் வாழ்வதற்கு இந்த சட்ட பிரிவு வகை செய்கிறது.

நீங்கள் விண்ணப்பிக்கும் பொழுது முடிவடையாமல் வீசா இருக்குமாயின் உள்துறை அமைச்சு உங்கள் விண்ணப்பத்தில் முடிவெடுக்கும் வரை வீசா தொடர்ந்து முடியும் வரை பயனில் இருக்கும்.

நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் வருவதற்கு ஒருவரின் உள்துறையிடம் உள்ள விண்ணப்பம் வழிவகை செய்யுமா என்றால் அதற்கு பதில் இல்லை என்று கூறவேண்டும். இதற்கிணைய நீங்கள் நாட்டுக்குள் நுழையும் பொழுது நுழைவு அனுமதி மறுக்கப்படலாம். இருப்பினும் வேறு ஒரு விண்ணப்ப முறையில் நாட்டுக்கும் வர நடவடிக்கை எடுத்தால் மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மேலே உள்ளது பொதுவான குடிவரவு சட்ட தகவல் மட்டுமே. உங்களுக்கு இது தொடர்பாக ஆலோசனை தேவைப்படின், தகுதியுள்ள குடிவரவு சட்டத்தரணியை நாடவும்.

Read next: இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய விமானம்!