இயற்கை முறையில் ஆண்குழந்தையை பெற்ற திருநங்கை, திருநம்பி தம்பதி

Aug 08, 2022 07:14 pm

டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய மாடல் ஆவார், தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். 

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. 

இதனையடுத்து, அவர் கர்ப்பமானார். தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தார்.

அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது எனலாம். அதேபோல, மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி உள்ளனர். 

எனினும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 2020இல் அமெரிக்காவின் ஒரேகானில் ஒரு பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறிய ஒருவர் இதுபோன்று குழந்தை பெற்றெடுத்தார்.


Read next: உக்ரைன் மக்களுக்கு போர் பயிற்சி வழங்கும் பிரித்தானியா