பிரான்சில் கோவிட் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 100,000ஐ எட்டுகிறது

Apr 13, 2021 08:25 pm

பிரான்ஸ் சுகாதார அமைச்சு அறிவித்த தகவலின் படி அங்கு 13 ஏப்ரல் 2021 தரவுகள் படி புதிதாக +39113 தொற்றுகள் பதிவாகிய காரணத்தால் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5 106 329ஆக உயர்ந்துள்ளது.  இவ்வாறு தொற்றுகள் அதிகரித்து வருவதால் பிரான்ஸ் உலக  தொற்றுகளின் அடிப்படையில் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 36 ஆல் குறைந்துள்ளது. இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆல் அதிகரித்து 5952 ஆக உள்ளது.

பிரான்சில் கோவிட் தாக்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99480 ஆக உள்ளது-இது புதிதாக உயிரிழந்த +345 பேரையும் உள்ளடக்கும்.

பிரான்சில் இதுவரை 11 057 251 பேருக்கு முதல் தடுப்பு மருந்தும் 3 837 266 பேருக்கு இரண்டு தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகையில் 16.50% பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 5.73% விகிதம் பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் 43.50%சனத்தொகைக்கு தடுப்பு மருந்தை கொடுத்தால் 60 தடுப்பு மருந்து விகிதத்தை பெறமுடியும். 60 விகித தடுப்பூசியை கொடுத்தாலும் 60 விகித நோய் தடுப்பை பெறமுடியும் என்று பொருளப்பட முடியாது.

Read next: கனடாவில் முதல் முறையாக அஸ்ட்ராஸெனெக்கா ஏற்றப்பட்ட பெண்ணுக்கு இரத்த உறைவு ஏற்பட்டது