கனடா: ரொரோண்டோவில் உள்ள மாணவர்களின் நேரடி கல்வி நிறுத்தப்பட்டது

1 week

ஈஸ்டர் விடுமுறைக்கு பின்னர் ஆரம்பித்த நேரடி வகுப்புகள் ஒருநாள் ஆரம்பித்த பின்னர் மீண்டும் நிகழ்நிலை வகுப்புகளாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்தது 2 வாரங்கள் நீடிக்கும். இந்த முடிவை ரொரோண்டோ சுகாதார அதிகாரி அவருக்குள்ள அதிகாரத்தை வைத்து மாகாண முதல்வரின் முந்தய  முடிவுக்கு எதிராக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் நேரடி கல்விக்காக திறந்திருக்கும் என்று அதிகாரிகள் அறிவித்த 24 மணி நேரத்தில், எதர்காக்க பாடசாலைகள் நேரடி கல்விக்காக மூடப்படுகிறது என்ற விளக்கத்தை பொது சுகாதார அதிகாரிகள் விளக்கவில்லை.

இதேவேளை முன்னதாக மாகாண முதல்வர் போர்ட் பாடசாலைகள் பாதுகாப்பானது என்றும் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் கூறி இருந்தார். அது அவ்வாறு இருக்க, வீட்டிலேயே  இருக்க  வேண்டும் என்ற உத்தரவை மேற்கொள்ளுமாறு அவர் மேல் அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியம் அற்ற வியாபர நிலையங்களை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

ஒன்ராரியோவில் செய்வாய் மட்டும் 3,065 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது, அதேவேளை 69 பேர் வியாழனுக்கு பின்னர் கோவிட் தாக்கி பலியாகி உள்ளார்கள். ஒப்பீட்டு அளவில் பிரித்தானியாவை விட சுமார் மூன்று மடங்கு அதிக தொற்றுக்களை கனடா பதிவு செய்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது.

Read next: தேர்தல் என்பது முடிவல்ல, மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.