பல் வலிக்கு சொத்தைப்பல் மட்டும் காரணமல்ல - வெளியான முக்கிய தகவல்

Mar 17, 2023 04:31 am

பல் வலிக்கு சொத்தைப்பல் மட்டும் காரணமல்ல என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல் வலி என்பது நாம் வாழ்நாளில் ஒருமுறையாவது எல்லோரும் அனுபவித்திருப்போம். 

பல் வலி பொதுவாக பல் சொத்தையால் வருகிறது என்று மட்டுமே ஒரு கருத்து இருக்கிறது. அது  உண்மையல்ல. உடன் இருக்கின்ற வேறு பிரச்சனைகளின் காரணமாகவும் நமக்கு பல் வலி தோன்றலாம்  அவை என்னென்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

8

சில நேரங்களில் பல் வலியானது மாரடைப்பினால் கூட இருக்கலாம். நம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேகஸ் நரம்பின் வழியாக  நமக்கு பல் வலியை ஏற்படுத்தும். இந்த நரம்பானது மூளையிலிருந்து  இதயம் மற்றும் நுரையீரல் வழியாக உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. 

சைனஸ் தொற்றும் பல் வலியை ஏற்படுத்திக் கூடிய ஒன்று. 

மேல் வரிசை பற்களில் ஏற்படுகின்ற வலி என்பது சைனஸ் பற்றின பொதுவான அறிகுறியாக இருக்கலாம். சைனஸைடிஸ் இருந்தால் அந்த இடங்களில் உள்ள திசுக்கள் வீக்கம் அடைந்து  வலியை ஏற்படுத்தும்.

Toothache:

டெட்டனஸ் நோயின் அறிகுறியின் காரணமாகவும் பல் வலியானது இருக்கலாம். டெட்டனஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம், டெட்டானி எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று ஆகும்.  இந்த பாக்டீரியாக்கள் உடலில் நுழையும் போது, அவை ஒரு நச்சுத்தன்மையை உருவாக்குகின்றன, இது வலிமிகுந்த தசை சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.  

டெட்டனஸின் மற்றொரு பெயர் லாக்ஜா.  இது பெரும்பாலும் ஒரு நபரின் கழுத்து மற்றும் தாடை தசைகள் பூட்டப்படுவதற்கு காரணமாகிறது, இதனால் வாயைத் திறக்கவோ அல்லது விழுங்கவோ கடினமாகிறது.

4

ட்ரைஜீமினல் நரம்புவலி என்பது சில நொடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை நீடிக்கக்கூடிய முகத்தில் ஏற்படும் திடீர் தீவிர வலி ஆகும். இது முகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் அல்லது இரு பக்கங்களிலும் வரலாம். 

இந்த நோயின் காரணமாகவும் நமது பற்களில் வலி ஏற்படலாம். அதனால் பல்வலி என்பது வெறும் சொத்தை பல்லினால் ஏற்படுகிறது என்று  அதான் கதையாக இல்லாமல்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Read next: இலங்கையில் திறக்கப்படும் முதலாவது ரேஜ் ரூம் - விரக்தியை வெளிப்படுத்த சந்தர்ப்பம்