வெளிநாட்டு மாணவர்களை குறைக்கும் முயட்சியில் பிரித்தானிய உள்துறை அமைச்சர்?

Oct 04, 2022 05:16 pm

பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இவர்கள் தங்களை சார்ந்து இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஒருவேளை வேலைக்கு சென்றாலும் கூட குறைவான திறன் கொண்ட வேலைகளில் தான் சேருகின்றனர்.

அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வித பங்களிப்பையும் ஆற்றுவது கிடையாது. 

இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதோடு குடியுரிமை கொள்கையை மறு ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை நான் பார்க்க விரும்புகிறேன்

மிக அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவதை பிரித்தானியா அவதானித்து வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Read next: மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்ட இயற்பியலுக்கான நோபல் பரிசு