கடலுக்கு அடியில் பாரிய எரிமலை வெடிப்பு! சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

Jan 15, 2022 10:37 am

கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக  டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொங்காவிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகளுக்குள் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அந்த நாட்டு தலைநகரில் கடலில் இருந்து சாம்பல் வெளியேறுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசுபிக் தீவுகளில் வாழ்பவர்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க சமோவா பகுதிக்கும் அமெரிக்கா சுனாமி  எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Read next: ஜப்பானில் மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்