இன்றைய ராசி நல்ல ராசி

Nov 16, 2022 06:17 am

 ஶ்ரீஅபிராமி  கோ.ஶ்ரீநிவாசனின் காலை வணக்கங்கள் தமிழால்  இறைவனை தினம் பாடு  இன்றைய ராசி பலன்கள்  நவம்பர்புதன் 16.11.2022 சுபகிருது - ஐப்பசி.30  தேய்பிறை அஷ்டமி (இன்று அதிகாலை 04.12 முதல் நாளை அதிகாலை 05.53 வரை) 

திதி: இன்று அதிகாலை 04.11 வரை சப்தமி பின்பு அஷ்டமி

நட்சத்திரம்: இன்று மாலை 05.51 வரை ஆயில்யம் பின்பு மகம்.யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

மேஷம்

 எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதினில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். எதிலும் பொறுமை வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 3 (மூன்று)

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

அஸ்வினி : நம்பிக்கை கூடும்.

பரணி : முன்னேற்றம் ஏற்படும்.

கிருத்திகை : பொறுமை தேவை.

 ரிஷபம்

 பணிகளில் நிதானமாக செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நுட்பமான புதிய சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்ட எண் : 5 (ஐந்து)

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

கிருத்திகை : புரிதல் உண்டாகும். 

ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

 மிதுனம்

 குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 2 (இரண்டு)

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

திருவாதிரை : கவனம் தேவை.

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

 கடகம்

 குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.   உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மாற்றம் நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 4 (நான்கு)

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். 

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

சிம்மம்

  நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஓய்வு நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு.

அதிர்ஷ்ட எண் : 7 (ஏழு)

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

மகம் : இழுபறிகள் குறையும். 

பூரம் : சேமிப்பு அதிகரிக்கும். 

உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

 குடும்பத்தாருடன் அனுசரித்து செல்லவும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி வந்த உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்ட எண் : 1 (ஒன்று)

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும். 

அஸ்தம் : புதுமையான நாள். 

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

 துலாம்

 புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதிற்கு விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கல்கள் நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 6 (ஆறு)

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.

சுவாதி : புரிதல் உண்டாகும்.

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

 விருச்சிகம்

புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இணையம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவேகம் வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 9 (ஒன்பது)

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

விசாகம் : பொறுமை தேவை.

அனுஷம் : புதுமையான நாள்.

கேட்டை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

 தனுசு

உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் உங்களின் மீதான நம்பிக்கை கூடும். தொழில் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் புதிய முதலீடுகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 3 (மூன்று)

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மூலம் : அனுசரித்து செல்லவும். 

பூராடம் : நம்பிக்கை கூடும்.

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 மகரம்

 அன்றாட பணிகளில் மாற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் புதிய மாற்றம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்னல்கள் நீங்கி விடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு.

அதிர்ஷ்ட எண் : 8 (எட்டு)

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : மாற்றம் ஏற்படும்.

அவிட்டம் : மகிழ்ச்சி ஏற்படும்.

 கும்பம்

    உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.   நுட்பமான புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், ஒருவிதமான சோர்வும் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்ட எண் : 3 (மூன்று)

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.

அவிட்டம் : குழப்பம் நீங்கும்.

சதயம் : அலைச்சல் ஏற்படும்.

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

 மீனம்

 தாய் வழி வந்த உறவுகளால் நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 4 (நான்கு)

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

பூரட்டாதி : மகிழ்ச்சி நிலவும்.

உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரேவதி : நெருக்கம் உண்டாகும்.

Read next: வவுனியாவில் கைதிகள் தப்பியோட்டம்!! தீவிரமாக தேடிவரும் பொலிஸார்