வியாழன் வரலாற்றில் இன்று
12 மே 2022-வியாழன்
907 : சீனாவில் 300 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது .
1364 : ஜாகெலோனியன் பல்கலைக்கழகம் போலந்தின் கிராகோவ் நகரில் நிறுவப்பட்டது.
1551 : அமெரிக்கர்களின் மிகப் பழமையான பல்கலைகழகம் சான் மார்கோஸ் பல்கலைக்கழகம் பெருநாட்டின் லீமா நகரில் அமைக்கப்பட்டது.
1797 : பிரான்ஸின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனீஸ் நகரைக் கைப்பற்றினார்.
1881 : துனீஷியா, பிரான்ஸின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது
1888 : தென்கிழக்காசியாவில் வடக்கு போர்னியோ, பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1902 : அமெரிக்காவில் ஒரு 1,40,000 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
1922 : 20 டன் எடை கொண்ட விண்கல் வர்ஜீனியாவில் விழுந்தது.
1937 : ஆறாம் ஜார்ஜ் மற்றும் எலிசபெத் மகாராணி பிரிட்டனின் ஆட்சியாளர்களாக முடிசூடினர்.
1942 : 1,500 யூதர்கள் போலந்தில் அவிஸ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு மூலம் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போர் :- மிசிசிப்பி ஆற்றில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஜெர்மனியின் நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1949 : பனிப்போர் :- சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
1965 : சோவியத் விண்கலம் லூனா - 5 சந்திரனில் மோதி
செயலிழந்தது.
1987 : இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.விராட் இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
1988 : மெக்ஸிகோவில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 58 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1998 : இந்தோனேஷியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரங்கள் ஆரம்பமானது.
2003 : ரியாத்தில் அல் - கொய்தாவால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2006 : பிரேஸில், சாவோ பாவுலோ நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் கொல்லப்பட்டனர்.
2008 : சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
2010 : லிபியாவின் திரிப்பொலி பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் விமானம் ஒன்று விழுந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
2015 : நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
Read next: இலங்கையில் இன்று 5 மணித்தியால மின் தடை