வரலாற்றில் இன்று SEP-9

Sep 09, 2022 06:30 am

1087 : இரண்டாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1513 : ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்காட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1543 : மேரி ஸ்டுவேர்ட் 9 மாத குழந்தையாக இருக்கும் போது ஸ்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.

1791 : அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் என பெயரிடப்பட்டது.

1799 : பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது.

1839 : அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதம் அடைந்தன.

1850 : அமெரிக்காவில் கலிபோர்னியா 31- வது மாநிலமாக இணைந்தது.

1922 : கிரேக்க- துருக்கிப் போர் துருக்கி வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1939 : இரண்டாம் உலகப் போர்:- போலந்தின் குரோவ் நகர் மீது ஜெர்மனி குண்டு வீசித் தாக்கியது.

1940 : ருமேனியாவில் இடம்பெற்ற கலவரங்களில் 93

ருமேனியரும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.

1944 : இந்தியப் பிரிவினையைத் தவிர்க்க காந்தி- ஜின்னா  பேச்சுவார்த்தை தொடங்கியது.

1945 : இரண்டாவது சீன- ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

1954 : அல்ஜீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர்.

1965 : அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் அருகே சூறாவளித் தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

1969 : கனடாவில் பிரெஞ்சும், ஆங்கிலமும் அரசின் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971 : நியூயார்க்கில் அட்டிகா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

1972 : உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் ஆசிய நாட்டினரை உடனடியாக வெளியேறும் படி உத்தரவிட்டார்.

1978 : நிகரகுவாவில் இடம்பெற்ற கிளர்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

1981 : 20 ஆண்டுகளுக்குப் பிறகு இமயத்திலுள்ள  கைலாயத்திற்கு பக்தர்கள் குழு சென்றது.

1988 : தாய்லாந்து, பாங்காக் அருகே இடி தாக்கியதால் ஒரு ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

1990 : இலங்கை, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் ஐந்து  கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள் 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1991 : சோவியத் 

ஒன்றியத்திடம் இருந்து தஜிகிஸ்தான் விடுதலை அடைந்தது.

1993 : பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.

2002 : பீகாரில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2009 : துபாய் மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.

Read next: அமெரிக்கா செல்கின்றார் பசில்