வாத நோய் (ஆர்த்தரைட்டிஸ்) மருந்து கடுமையான கொவிட் சிகிச்சைக்கு பயன்படலாம்-புதிய ஆய்வு முடிவுகள்

1 week

மூட்டழற்சி எனப்படும் கடுமையான ஆர்த்தரைட்டிஸிற்கு பயன்படுத்தப்படும் டொஸிலிஸ{மாப் மருந்தைக்கொண்டு கொவிட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என ஆரம்பகட்ட பரிசோதனை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய இராஜ்ஜிய மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இது குறித்து வியப்படைந்துள்ளன.

இந்த மருந்து இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் உயிர்பிழைப்பது குறித்த ஆய்வு தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முழுமையான தரவுகள் வெளிப்படுத்தப்படும் வரை முடிவுக்கு வரமுடியாது என ஏனைய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டொஸிலிஜுமாப் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றது.இது கொரோனா வைரஸ் நோயாளிக்கு செலுத்தப்படும் போது ஏற்படும் எதிர்வினை வைரஸை விடவும் ஆபத்தானது என்றும் கூறப்படுகின்றது.

இந்த மருந்து தொடர்பான ஆய்வு லண்டன் இம்பீரியல் கல்லூரி ஐக்கிய இராஜ்ஜியத்தின் கணக்காய்வின் தேசிய தீவிர பிரிவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அட்ரெட்ச் பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த ஆய்வு செயற்கை சுவாசக்கருவி தேவைப்படும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளர்களையே கருத்திற்கொள்கின்றது.

இது சிறப்பாக தொழில்புரிகின்றது என்பதை முதல் 303 நோயாளர்களிடத்தில் காணக்கூடியதாக இருந்ததாகவும் அதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தரவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு மேலும் சிர வாரங்கள் செல்லும் என்றும் இது குறித்த முடிவு உத்தியோகபூரவமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து நரம்பு வழியாக செலுத்தப்படும் என்பதுடன் இதற்கான செலவாக 500 பவுண்ஸ் தொடக்கம் 1000 பவுண்ஸ் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Read next: ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கும் ஒருவர் கொரோனாவால் பலி! உலக சுகாதார அமைப்பு