இன்றைய ராசிபலன் தெரிந்துகொள்ள.!

Sep 10, 2022 06:19 am

இன்றைய  ராசிபலன் (10.09.2022)

Aries-மேஷம்

உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றத்தின் மூலம் மேன்மையான சூழல் அமையும். உடன்பிறந்தவர்களின் வழியில் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் நிறைவுபெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். லாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும். 

பரணி : உதவி கிடைக்கும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.

Taurus-ரிஷபம்  

தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு மேம்படும். புதிய முயற்சிகளில் உழைப்பு அதிகரிக்கும். செய்யும் செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : சேமிப்பு மேம்படும். 

மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.

Gemini-மிதுனம்

வித்தியாசமான அணுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும். 

திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும். 

Cancer-கடகம்

தந்தையின் உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : புரிதல் ஏற்படும்.

ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

 Leo-சிம்மம் 

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான வியூகங்களும், எண்ணங்களும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : வாய்ப்புகள் கைகூடும்.

பூரம் : நெருக்கம் உண்டாகும்.

உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும். 

 Virgo-கன்னி 

உத்தியோக பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனைகளை வாங்குவது தொடர்பான விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : ஆதரவான நாள்.

அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும். 

சித்திரை : லாபகரமான நாள்.

Libra-துலாம் 

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோக  பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.

சுவாதி : முன்னேற்றமான நாள்.

விசாகம் : இன்னல்கள் குறையும்.

Scorpio-விருச்சிகம் 

குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

Sagittarius-தனுசு  

குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தம் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மூலம் : முயற்சிகள் சாதகமாகும்.

பூராடம் : ஒப்பந்தம் கைகூடும். 

உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

Capricorn-மகரம்  

சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். சிந்தனைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : திருப்பங்கள் உண்டாகும்.

Aquarius-கும்பம் 

தனவரவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அவிட்டம் : கவனத்துடன் செயல்படவும்.

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

Pisces-மீனம் 

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் கைகூடும். பணிகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும். 

உத்திரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.

ரேவதி : மாற்றம் ஏற்படும்.

Read next: காலை தரிசனம் ; ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம்.