பிரசவ வலியில் பெண் மரணம், தாதியர்களுக்கு சிறை

பிரசவ வலியின்போது ஒரு பெண்ணின் மரணத்தமை தொடர்பில், மூன்று செனகல் நாட்டு தாதியர்கள் ஆபத்தில் உள்ள ஒருவருக்கு உதவாத குற்றத்திற்காக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அஸ்து சொக்னா என்ற பெண் சத்திர சிகிச்சையை கோரிய நிலையில் இறந்ததை அடுத்து, அவர்கள் ஆறு மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனையைப் பெற்றுள்ளனர், குறித்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தையும் இறந்துள்ளது.
விசாரணையில் இருந்த ஏனைய மூன்று தாதியர்கள் குற்றவாளிகள் என கண்டறியப்படவில்லை
இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஜனாதிபதி மெக்கி சால் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சொக்னா தனது 30 வயதில் வடக்கு நகரமான லூகாவில் உள்ள ஒரு வைத்தியசாலையில் காலமானார்.
20 மணி நேரமாக தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு அவர் விடுத்த வேண்டுகோள் வைத்தியசாலையால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்து சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினால், “வைத்தியசாலையில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம்” என வைத்தியர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read next: ரஷ்ய படைகளை விரட்டும் உக்ரைன்