கனடாவில் நடந்த கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

Nov 24, 2022 08:44 am

கனடாவின் பீட்டர்பரோவின் கிழக்கே இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 5:15 மணியளவில் SUV மற்றும் பிக்கப் டிரக் விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர். 

பிக்கப்பை ஓட்டிச் சென்றவர் 42 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் பயணித்தவர்களில் 18 வயதான ரிடிக் ஹார்ட், 46 வயதான ஜொனாதன் மெக்டோனல் மற்றும் 52 நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

SUV-யில் இருந்த பெண் பயணி ஒருவர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் டொராண்டோவில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read next: வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். தமிழர் ஒருவரின் விபரீத முடிவு