1,300 அடி பள்ளத்தில் விழுந்த பஸ்! 3 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியான கோர சம்பவம்

Sep 08, 2021 05:11 am

மத்திய பொலிவியாவில் மலை ஒன்றில் இருந்து பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

33 பயணிகளுடன் சென்றிருக்கும் அந்த பஸ் வண்டி கடந்த திங்கட்கிழமை காலை கொசபம்பா மாநிலத்தில் மலை ஒன்றில் இருந்து 400 மீற்றர் (1,300 அடி) ஆழத்திற்கு சரிந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒன்று, இரண்டு மற்றும் ஆறு வயதுடைய மூன்று சிறுவர்கள் உள்ளனர் என்று பேஸ்புக்கில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இறுக்கமான வளைவைக் கொண்ட இந்த பகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக உள்ளூர் வானொலி ஒன்று குறிப்பிட்டுள்ளது. 

விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read next: இலங்கையில் நில அதிர்வு ஏற்பட்டதா? வெளிவந்த உண்மை