அர்ஜென்டினா துணை ஜனாதிபதி தாக்குதலில் மூன்றாவது சந்தேக நபர் கைது

Sep 13, 2022 09:10 pm

அர்ஜென்டினாவில் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் மீதான தோல்வியுற்ற கொலை முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகஸ்டினா டயஸ் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், தலைநகர் புவெனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியான சான் மிகுவலில் திங்கள்கிழமை இரவு தடுத்து வைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேசில் பிரஜை என்று கூறப்படும் துப்பாக்கிதாரி பெர்னாண்டோ சபாக் மொன்டீலின் கூட்டாளியின் கைத்தொலைபேசியில் புதிய சந்தேக நபர் பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


Read next: ஒன்ராறியோவில் மாகாணத்திற்கு விடுமுறை இல்லை