கண் பராமரிப்பு மற்றும் 20-20-20 கண் விதி பற்றி அறிந்திருக்க வேண்டியவை

Mar 17, 2023 04:02 am

கண்களின் ஆரோக்கியம் நமது ஆரோக்கியத்தின் முக்கிய பங்கு பகுதியாகும்.நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை பார்க்கவும் உணரவும் நம் கண்களே முக்கிய பங்கு  வகிக்கின்றன. 

ஆனால் சில கண் நோய்கள் பார்வையிழப்புக்கு வழிவகுக்கும் இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதன் மூலமும் நம் கண்களின் பார்வை திறனை அதிகரிப்பதற்கும்  கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

நமது உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது பார்வை திறனை பாதுகாக்க இயலும். 

Prevent

குறிப்பாக ஆழமான மஞ்சள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதைத் தவிர ஒமேகா-3 அதிகமாக உள்ள  மீன்களை சாப்பிடுவதன் மூலமும்  கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அளவுக்கதிகமான உடல் எடை  நம் கண்களை பாதிக்கும் மற்றொரு காரணியாகும். அதிகமான உடல் எடை அதிகரிப்பினால்  நீரிழிவு நோய் ஏற்படும். இந்த நீரிழிவு நோயானது இன்னும் விழித்திரையை பாதிக்க கூடிய ஒன்றாகும்.

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் பார்வை திறனை மேம்படுத்தலாம்.தினமும் உடற்பயிற்சி செய்வது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மேலும் உடற்பயிற்சியானது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். இதன் காரணமாக நமது பார்வை திறன் குறையாமல் வைத்துக் கொள்ளலாம்.

புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால்  அவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம்  வயது சார்ந்த கண் பார்வை குறைபாடுகளை சரி செய்து கொள்ள முடியும் .

Computer

அதிகமாக கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்கள் 20-20-20 விதிமுறைகளை பயன்படுத்தி நம் கண்களின் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளலாம்.தொடர்ந்து நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது  நம் கண்களானது சோர்வடையும்.

இதனை சரி  செய்ய 20 நிமிடங்களுக்கு ஒரு முறை  நமக்கு முன்பாக இருபது அடி தூரத்தை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் கண்கள் பார்வை குறைபாடுகளில் இருந்து தடுக்கப்படுகிறது.


Read next: பல் வலிக்கு சொத்தைப்பல் மட்டும் காரணமல்ல - வெளியான முக்கிய தகவல்