உடல் எடையை குறைக்க காலை உணவில் சேர்க்க வேண்டிய விடயங்கள்

Mar 15, 2023 02:42 am

உலகம் முயற்சிக்கும் பலர் எடை இழப்பிற்கு போராடி வருகின்றனர்.

நம் உணவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேகமாக எடையை குறைக்க விரும்புபவர்கள் துரித உணவுகள் மற்றும் அதிக கலோரிகளை கொண்ட உணவுகளிலிருந்து தங்களை தூரப்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனால், நாம் உணவுப் பிரியராக இருந்தால் இவற்றை செய்வது சற்று கடினமான காரியம் தான். நீண்ட நேரம் பசிக்காமலும் அதே நேரம் நமது எடை இழப்பிற்கும் உதவக்கூடிய உணவுகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Ive

ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை பட்டர்:

ஆப்பிள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு பல வகையாகும். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. வேர்க்கடலை, பட்டரில் ஏராளமான புரதங்கள் நிறைந்திருக்கிறது. இவற்றை நம் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும் நமக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இவை உதவுகின்றன.

How

தர்பூசணி :

எடை இழப்பிற்கு உதவக்கூடிய மிக முக்கியமான பழங்களில் ஒன்று தர்பூசணி. இவற்றில் ஏராளமான நார்ச்சத்துக்களும் நீர்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இதன் கலோரி அளவு மிகக் குறைவு. மேலும் இவற்றை எடுத்துக் கொண்டால் நமது பசி எடுக்கும் உணர்வும் கட்டுப்படும்.

Fastest

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு காய். இது மிக மிக குறைந்த கலோரிகளைக் கொண்ட ஒரு காயாகும். இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது நமது பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறைப்பிற்கு முக்கிய காரணமாக செயல்படுகிறது.

பாலாடைகட்டி மற்றும் பழம்:

பாலாடைக் கட்டியில் புரதம் மற்றும்  கால்சியம் சத்துக்களும் மினரல்களும் நிறைந்து காணப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. மேலும் இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. இவற்றை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும்போது நமது பசியை கட்டுப்படுத்தி உடல் எடை குறைவதற்கு காரணமாக வழங்குகிறது.

Read next: ஆஸ்திரேலியாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி நிலை!