உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி; தடையை மீறிய ஜேர்மன் உள்துறை அமைச்சர்!

Nov 24, 2022 01:24 pm

  உலகக் கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளின் போது அணித் தலைவர்கள் ONE LOVE கைப்பட்டி அணிவதற்கு FIFA தடை விதித்துள்ளது.இந்நிலையில், ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் அக்கைப்பட்டியை அணிந்துகொண்டு பீபா தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்தை சர்ர்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருபாலின உறவுகொள்பவர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் உட்பட்ட LGBTQ சமூகத்தின் உரிமைகளுக்கு ஆதரவாக ONE LOVE எனும் கைப்பட்டியை போட்டிகளின் போது அணித்தலைவர்கள் அணிவதற்கு 7 ஐரோப்பிய அணிகள் தீர்மானித்திருந்தன.இங்கிலாந்து, வேல்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்ஸர்லாந்து. பெல்ஜியம் ஆகியனவே இந்நாடுகளாகும். இந்நிலையில் போட்டியின்போது வீர்ரகள் வன்லவ் கைப்பட்டியை அணிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (FIFA) எச்சரிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் , வன்லவ் கறுப்புப்பட்டி திட்டத்தை முன்வைத்த, 7 நாடுகளின் கால்பந்தாட்டச் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தன.

உலகக்

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஜேர்மனி- ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் இப்பட்டியை அணிந்துகொண்டு FIFA தலைவர் ஜியானி இன்ஃபன்டினோவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அதேசமயம் FIFAவின் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜப்பானுடனான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜேர்மனிய வீரர்கள் அணியாக போஸ்கொடுத்தபோது வாயை கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

Read next: உணவு, தண்ணீரின்றி இரண்டு நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்