டுவிட்டரை கண்காணிக்கும் வெள்ளை மாளிகை!

Nov 29, 2022 05:46 am

டுவிட்டர் நிறுவனத்தைப் போலித் தகவல்களுக்காகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களை வெளியிடுபவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது அந்நிர்வாகத்தின் பொறுப்பாகும் என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முடக்கப்பட்ட பல டுவிட்டர் கணக்குகளை அண்மையில் மஸ்க் மீண்டும் நிறுவினார். வார இறுதி நாள்களில் டுவிட்டரில் சேர்ந்த புதிய பயனீட்டாளர்களின் எண்ணிக்கை இதுவரை காணாத அளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அத்தளத்திலிருந்து விளம்பரதாரர்கள் பலர் வெளியேறுகின்றனர். அதன் காரணம், டுவிட்டர் அறிமுகப்படுத்தும் சரிபார்ப்பு நடவடிக்கையும் தளத்தில் நிலவுகின்ற வெறுக்கத்தக்கப் பேச்சும்.

ஆர்வலர் குழுக்கள் நிறுவனங்கள் மீது அழுத்தம் கொடுக்கும்போது  வெறுக்கத்தக்க பேச்சு ஏற்படுகிறது என்று மஸ்க் கூறினார்.

சமூக ஊடகங்கள் வன்முறை மூட்டும் தளமாக மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு அதன் நிர்வாகிகளைச் சேரும் என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read next: பிரான்ஸிலிருந்து லண்டன் திரும்பியவருக்கு அதிர்ச்சி! 550 பவுண்ட் அபராதம் விதித்த அதிகாரிகள்