இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது.

2 weeks

நாட்டில் மேலும் 439 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 437 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் வருகை தந்த கடற்படையினர் இருவர் கொ ரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 377 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 462பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

Read next: 2021 வரவு செலவுத்திட்டம்: வருவாயைத் திரட்டும் முறையினைக் குறிப்பிட அரசாங்கம் தவறிவிட்டது – ஐ.தே.க.