ரணிலின் வருகையையடுத்து திடீரென வலுவடைந்த இலங்கை ரூபாய் பெறுமதி

May 13, 2022 06:25 am

இலங்கை ரூபாய் நிகரான டொலர் பெறுமதியில் பல மாதங்களின் பின்னர் சிறிய வீழ்ச்சியடைந்து ரூபாய் பெறுமதி வலுவடைந்துள்ளது.

இலங்கையில் பல உரிமம் பெற்ற வணிக வங்கிகள் இன்று ஒரு அமெரிக்க டொலர் விற்பனை விலையை 365 ரூபாயாக அறிவித்துள்ளது.

நேற்றையதினம் 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அமெரிக்க டொலர் இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை டொலரின் கொள்வனவு விலை 353 ரூபாயாக பதிவாகியுள்ளது.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துக் கொண்டவுடன் இந்த மாற்றம் ஏற்டப்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Read next: உக்ரைன் - ஹெர்சன் நகர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்