உலகிற்கு ஆபத்தான யுகத்தைத் தொடங்கிவைத்துள்ள ரஷ்யா - உக்ரேன் போர்!

Jan 15, 2023 05:36 am

ரஷ்யா-உக்ரேன் போர் உலகிற்கு ஆபத்தான யுகத்தைத் தொடங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio kishidaa) இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். 

ரஷ்ய அத்துமீறல் சீனாவுக்கு மேலும் துணிவைத் தரும் என்று தாம் அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கு இடையே, பெய்ச்சிங்குடனான உறவில் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை ஒன்றிணைந்து நிற்பது அவசியம் கிஷிடா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோக்கியோ தனது ராணுவத்தை நவீனப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகச் சிக்கலான, சவால்மிக்க பாதுகாப்புச் சூழலில், அமெரிக்கா- ஜப்பான் கூட்டணி வரலாற்றுத் திருப்புமுனையை எட்டியுள்ளதாகவும் ஜப்பானியப் பிரதமர் குறிப்பிட்டார்.

Read next: அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்