மெத்தனப்போக்குடன் இருந்த காவல்துறை

Mar 15, 2023 07:32 am

டாஸ்மாக் அனைத்து சங்க தோழர்களும் ஒன்று கூடுவோம்  சென்னை மாவட்டங்களில்  காலை கடை திறக்காமல்   டாஸ்மாக் தலைமை அலுவலகம்  (மேலாண்மை இயக்குனர்  அலுவலகம்) முன்பாக  அஞ்சலி செலுத்துவோம்.

சிவகங்கை  மாவட்டத்தில்  சமூக விரோதிகளின் கொலை பசிக்கு  ஆளான  விற்பனையாளர் தோழர் அர்ஜுனன்  குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழக அரசே டாஸ்மாக் நிர்வாகமே  பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பலியான  விற்பனையாளர் அர்ஜுனன் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 லட்சம்  நஷ்ட ஈடு வழங்கு. 

அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குஉயிர் பலியான அர்ஜுனனின் மூன்று பெண் பிள்ளைகளின் கல்வி  செலவை அரசு ஏற்கவேண்டும்.

உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய். 

முதல் முறை அசம்பாவிதம் நடந்த பொழுது  முறையாக விசாரணை நடத்தாமல் மெத்தனப் போக்கோடு இருந்த காவல்துறை மற்றும் மாவட்ட மேலாளர் மீது  நடவடிக்கை எடு.

Read next: அமெரிக்காவின் ட்ரோனை தாக்கிய ரஷ்யா : மேற்கு நாடுகளுடன் நேரடியாக மோதும் மொஸ்கோ!