கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Nov 29, 2022 01:25 am

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நேற்று பிற்பகல் இந்தியாவின் மதுரை நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம். 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ்-321 நியோ ரக விமானமாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் பழுது பார்க்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

Read next: பாரிஸில் கடத்தல் சம்பவத்தில் சிக்கிய இலங்கை, இந்தியர்கள் - விசாரணையில் வெளியான தகவல்கள்