பிரான்ஸில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி!

Jan 27, 2023 06:30 am

பிரான்ஸில் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி வானத்தில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3.40 மணி அளவில் Nante நகரில் இடம்பெற்றுள்ளது. 

புறநகர் பகுதியில் பொலிஸார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது வாகனம் ஒன்று அதிவேகமாக பயணித்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, குறித்த வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

அப்போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளனர்.

ஆபத்தை உணர்ந்த அதிகாரிகள், குறித்த வாகனத்தை துரத்திச் சென்றனர்.

மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணித்த வாகனம் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள் சிக்கியது. 

வீதியின் அருகே இருந்த மரம் ஒன்றுடன் மோதி வாகனம் தூக்கி வீசப்பட்டது.

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த 21 வயதுடைய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 

மணிக்கு 80 கி.மீ அதிகபட்ச வேகம் கொண்ட குறித்த சாலையில் அவர்கள் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணித்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Read next: ஐக்கிய முஸ்லிம் முன்னே ற்ற கழகம் சார்பில் 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது