யாழில் பெட்ரோல் நிரப்ப சென்ற நபருக்கு நேர்ந்த கதி

Aug 11, 2022 11:28 am

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கான பெட்ரோலை பெற்றுக்கொள்ள தனது QR குறியீட்டை காண்பித்த நிலையில் , மோட்டார் சைக்கிளுடன் மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துள்ளார். ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Read next: பிரான்ஸில் அத்தியாவசிய உணவுப்பொருளுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு