கட்டாரில் விற்கப்படவிருந்த மிகபெரிய மதுபானத்திற்கு நேர்ந்த கதி!

Nov 24, 2022 01:07 am

கட்டாரில் நடைபெறும் வரும் FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மதுபானங்கள் ஓரளவு விற்கப்படும என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது.

போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் அந்த முடிவு திடீரென்று மீட்டுக்கொள்ளப்பட்டது.

போட்டியின் ஆதரவாளரான Budweiser மதுபான நிறுவனம் அதன் பியரை விற்கமுடியாமல் போனது.

இந்த நிலையில் போட்டிக்காகத் தயார்செய்யப்பட்ட பாரிய அளவிலான மதுபானங்களின் கதி என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

அதற்கமைய, போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு மதுபானத்தைக் கொடுக்கவுள்ளதாக அது Twitter-இல் அறிவித்துள்ளது.

கிடங்கு ஒன்றில் மதுபானப் பொட்டலங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் படம் ஒன்றும் பதிவில் இணைக்கப்பட்டிருந்தது.

தற்போது போட்டியில் வெல்லும் அணிக்கு 42 மில்லியன் டொலர் பரிசுத்தொகை மாத்திரமின்றி மிகப்பெரிய அளவிலான மதுபானமும் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read next: ஐரோப்பிய நாடுகளின் விமான பயணிகளுக்கு விசேட அறிவிப்பு