யாழில் நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி

Nov 21, 2022 12:16 am

யாழ்ப்பாணம், வடமராட்சி – கற்கோவளம் பகுதியில் நேற்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.

இணைந்து நீராடிய நண்பர்களால் கூக்குரலிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத்தினர் அந்த யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அலன்மேரி ஆனந்தராஜா எனும் 18 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Read next: வெளிநாட்டில் பொது ஏலத்தில் விடப்பட்ட இலங்கை பெண்கள் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்