பிரான்ஸிலிருந்து இலங்கை சென்ற 2 பெண்களுக்கு நேர்ந்த கதி

Jul 05, 2022 10:38 am

பிரான்ஸ் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற யுவதிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. 

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர்.

இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞர் இரு பெண்களையும் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பாலியல் ரீதியில் அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய  இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சட்டவைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read next: ரஷ்யாவை காயப்படுத்தினால் பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுவிஸ் தூதர்