பலாலி விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதி!

Feb 13, 2023 01:13 am

யாழ். - பலாலி சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற (Duty Free) வர்த்தக வளாகத்தின் முதலாவது தொகுதி  திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைத் தலைவர் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

Read next: ஐரோப்பாவில் Nord Stream எரிவாயுக் குழாய் வெடிப்பு - ரஷ்யா விடுத்த கோரிக்கை