முழு பொறுப்பும் ரணில் கையில் - அமைதியாக செயற்படும் கோட்டாபய

May 13, 2022 08:56 am

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்க இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரமும் ரணிலுக்கே இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்களுடன் நேற்று கலந்துரையாடிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புதிய பிரதமருக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி முன்னாள் அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு பல பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தான் தெரிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், முன்னாள் அமைச்சர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

மக்களுக்கு எரிவாயு, மின்சாரம் மற்றும் எரிபொருளை தொடர்ந்து வழங்குவதே தனது முதல் கடமை எனவும், இது தொடர்பில் சர்வதேச உதவி நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.


Read next: நிலவின் மண்ணில் விதைகளை முளைக்க வைத்து புளோரிடா பல்கலைக்கழ விஞ்ஞானிகள் சாதனை..!!