சிங்கப்பூரில் ஓடும் வாகனம் முன்பு வேண்டுமென்றே விழும் நபரின் நாடகம் அம்பலம்

Oct 04, 2022 01:56 pm

சிங்கப்பூரில் ஓடும் வாகனம் ஒன்றின் முன் வேண்டுமென்றே கீழே விழுந்து கார் மோதியது போல நடித்த ஊழியர் ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது.

இதனை தற்போது சிங்கப்பூர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வினோதமான சம்பவம் Complaint Singapore பேஸ்புக் குழுவில் பகிரப்பட்டது.

சிராங்கூன் நார்த் அவென்யூ 5 வழியே கார் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை எதிர்கொண்டார், என்பதை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கார் நெருங்கியதும், அவர் காரின் முன் விழுந்தார். கார் ஓட்டுநர் நல்வாய்ப்பாக பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்தினார்.

கார் இடித்தது போல் நடித்து காட்டிய அவரின் வீடியோ சம்பந்தப்பட்ட காரின் டேஷ்போர்டு கேமராவில் சிக்கியது. இதனை விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.


Read next: இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் சீமெந்து விலை!