யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தரை தூக்கிச் சென்ற இராட்சத பட்டம்! அதிர்ச்சியில் மக்கள்

Dec 21, 2021 03:26 am

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - புலோலி பகுதியில் பட்டம் விட்ட  குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில்  பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். 

பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர். 

அப்போது, இரண்டாவது பட்டத்தின் கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.

சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர். 

சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.


Read next: இராணுவத்தின் கூட்டு படுகொலைகள் அம்பலம் - 40 பேர் கொலை