பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்!

Jan 24, 2022 01:32 pm

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா மரவனத்தம் கிராமம், அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாலத்தின் அருகே உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டுள்ளது. அந்த குழந்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது.

இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துபோலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் அந்த சிசுவை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என் குழந்தையை வீசி சென்றனர். கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read next: சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி!