முதல்வர் அரசியல் காரணங்களுக்காக ஆளுனர் தேனீர் விருந்தில் கலந்து இருக்கலாம்

Jan 30, 2023 11:42 am

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் முதல் மாநில மாநாடு வானகரத்தில் நடைபெற்றது இதில் ராஜஸ்தான், ஒடிசா மாநிலத்தை போன்று ஒப்பந்த மயத்தை ரத்து செய்து தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும்

டாஸ்மாக் விற்பனையாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின்

தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : கிட்டதட்ட36,000 டாஸ்மாக் பணியாளர்களோடு  தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 

தற்போது வெறும் 25 ஆயிரம் பணியாளர்களோடு நடைபெற்று வருகிறது கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பணியில் இல்லை அந்த 10,000 மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 8,000க்கு மேற்பட்டவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்கிற

ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதற்கு காரணம் இவர்களுக்கான பணி சுமை, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லா தரப்பினரும் அவர்களுக்கு கொடுக்கிற மன அழுத்தத்தின் காரணமாக பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்பட்டு வாழ வேண்டிய வயதில்

அவர்கள் இன்றைக்கு நம்மோடு வாழ முடியாத ஒரு சூழலுக்கு இந்த பணியாளர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆதலால் தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியும் திராவிட முன்னேற்ற கழகம் தந்தது போல் டாஸ்மார்க் பணியாளர்கள்

ஆண்டொன்றுக்கு 36,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிற ஒரு நிறுவனமாக இந்த நிறுவனத்தை பல்வேறு துன்பங்களும், துயரங்களுக்கும் இடையில் இந்த பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள் ஆதலால் இவர்களை உடனடியாக அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்

இன்றைக்கு பல்வேறு டாஸ்மாக் அதிகாரிகள் சொல்வது இந்த டாஸ்மாக் பணியாளர்கள் பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் அதிகமாக கேட்கிறார்கள் என்று எங்களுடைய தொழிலாளர்கள் இனி எந்த காலத்தில் அப்படி கேட்க மாட்டார்கள்.

அரசாங்க செய்ய வேண்டியது ஒன்றுதான் 25,000 பேரையும் பணி வரைமுறை செய்து பணி நிரந்தரமாக்கி மற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கின்ற அத்தனை சலுகைகளையும் இவர்களுக்கு வழங்குங்கள்.

அப்படி வழங்குகின்றபோது இந்த பணியாளர்கள் எங்கேயும் அது போன்ற ஒரு தவறுகளை செய்தால் அப்போது நீங்கள் இவர்களை நிரந்தரமாக கூட பணியிலிருந்து நீக்குங்கள் நாங்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டோம்

அதை விடுத்து இன்றைக்கு இவர்கள் ஒவ்வொரு நாளும் இவருடைய வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது அந்த கடையை முடித்து விற்பனை செய்து பணத்தை கொண்டு போய் அரசு கஜானாவில் செலுத்துவதற்குள்

பல உயிர்களை பலி கொடுத்திருக்காங்க பல்வேறு தரப்பினர்களுடைய மிரட்டலுக்கு ஆளாகி துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வீசுகிறார்கள்.

இந்த துறையில் இருக்கக்கூடிய இந்த கஷ்டத்தை இந்த துன்பத்தை கண்டிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உணர்ந்து இந்த தொழிற்சங்கத்தினுடைய தலைவர்களை அழைத்து

பேசி இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோள் அப்படி இல்லை என்றால் எனது கட்சியின் பிரதான கோரிக்கையாக உள்ள 

 டாஸ்மாக் கடைகளை படிப்படியாக இழுத்து மூடுங்க இந்த 25,000 பேரையும் அரசினுடைய பல்வேறு தளங்களில் அரசு ஊழியர்களாக பணியமர்த்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள் என்பது தான் எமது  கோரிக்கை.

முதல்வர் அரசியல் காரணங்களுக்காக ஆளுனர் தேனீர் விருந்தில் கலந்து இருக்கலாம் நான் கருத்து சொல்ல முடியாது 

முதல்வர் தேநீர் விருந்தை புறக்கணித்து இருக்க வேண்டும் என்பது எனது பார்வை என தெரிவித்தார்.

Read next: சமத்துவ சம்பந்தி விருந்து நடைபெற்றது