அந்த கேள்வி மட்டும் கூடாது… பத்திரிக்கையாளர்களுக்கு கண்டீஷன் போட்ட ராஷ்மிகா!

Mar 06, 2022 04:27 am

 நடிகை ராஷ்மிகா இப்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உருவாகியுள்ளார்.

விஜய் தேவாரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்த கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய இருபடங்களும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வந்தன.

அந்த செய்தியை இருவருமே மறுத்துவிட்டாலும் இன்னமும் அதுபற்றிய பேச்சுகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ராஷ்மிகா சந்திப்புக்கு முன்பாக ஒரு கண்டீஷனை போட்டுள்ளாராம்.

விஜய் தேவாரகொண்டாவுடனான காதலைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று. இது சம்மந்தமாக மேலும் ‘அவருடன் நடித்ததில் இருந்து இப்படி ஒரு வதந்தி கிளம்பிவிட்டது.

நான் இல்லை இல்லை என்று சொல்லி அலுத்துவிட்டேன். ஆனாலும் பத்திரிக்கைகளில் இதுபற்றிய செய்தி அதிகமாக வருகிறது. பெரிய படங்கள் கைவசம் இருப்பதால் நான் அதில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறிவிட்டாராம்

Read next: அவுஸ்திரேலியாவில் நிர்வாண புகைப்படங்களை கேட்டு சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கை இளைஞன்