திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற அதிரடி சம்பவம்! வைரலாகும் வீடீயோ...

இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட திருமதி இலங்கை அழகிப் போட்டியில் சுவாரஷ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராகவும், திருமதி ருவந்தி என்பவர் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தனர்.
இதில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்.
இது போட்டியின் விதிமுறைகளுக்கு முறனாக இருந்துள்ளது.
இந்த நிலையில் திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரிடமிருந்து மகுடம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
திருமதி புஷ்பிகா டி சில்வாவிற்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு மகுடம் சூட்டப்பட்டது.