இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நெட்பிலிக்ஸின் கோயிலில் முத்தமிடும் காட்சி

4 months

இந்தியாவில் ஒளிபரப்பாகும்  நெட்பிளிக்ஸ் தொடரானயு ளுரவையடிடந டீழலஎனும் தொடரில் வரும் ஒரு முத்தக்காட்சி தொடர்பில்  விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த முத்தக் காட்சி தொடர்பில் இந்தியாவின் ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையான ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியதன் பின்னர் விசாரணைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு இந்துக்கோவிலின் பின்னணியில் ஒரு முஸ்லிம் பையனை ஒரு இந்துப் பெண் முத்தமிடுவதாக காட்சியமைக்கப்பட்டுள்ளதை அடுத்தே எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான விக்ரம் சேத் எழுதிய ஆங்கில நாவல் ஒன்றை மையமாக வைத்து குறித்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதுடன்ஒரு இளம்பெண்ணின் கணவருக்கான தேடல்என்ற பாத்திரத்தை பிரதானமாக கொண்டது.

இதுபோன்ற முத்தக்காட்சி குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வுகளை புன்படுத்துவதாக அமையப்பெற்றுள்ளது என மத்திய பிரதேசம் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு மதத்தின் நம்பிக்கையை கொச்சைப்படுத்திய அடிப்படையில் குறித்த தொடரின் காட்சிகளை வடிவமைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொலிஸாரை பணித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொடரில் உள்ள முத்தக்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்பு  ஒன்று பிரத்தியேகமாக மற்றுமொரு முறைப்பாட்டை பொலிஸில் பதிவு செய்ததுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

எனினும் பொலிஸ் முறைப்பாடு பற்றிய தமது கருத்துக்களை வெளியிட நெட்பிளிக்ஷ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பேச்சாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் படைப்பாளிகளின் சுதந்திரம் குறைவடைந்துவருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

நெட்பிளிக்ஷ் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு அதிகளவான சந்தைவாய்ப்புக்கள் கிடைக்கும் நாடாக இந்தியா உள்ளமையால் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிறுவனம் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நெட்பிளிக்ஷ் நிறுவனத்தின் வீடியோ தயாரிப்புக்களை பகிஷ்கரிக்க வேண்டும் என பல்வேறு இந்திய செயற்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Read next: கொவிட் தொற்றினைத் தொடர்ந்து கணக்கீட்டை சமப்படுத்துவதற்கு வசந்தகாலத்தில் வரிகள் அதிகரிக்கப்படும் என சுனக் தெரிவிப்பு