அயோத்தியில் உருவாகும் ராமர் கோயில்! நியூயோர்க் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் 3D படங்கள்

1 week

அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.

இதை முன்னிட்டு நியூயார்க் நகரில் இருக்கும் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் புகைப்படங்கள், 3D படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க இந்தியா பொது மக்கள் விவகாரத்துறை தலைவர் ஜகதீஷ் செவானி கூறுகையில்,

அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறப்பு ஒளிபரப்புக்காக உலகிலேயே மிகப்பெரிய பில்போர்டு அமைக்கப்படுகிறது.

இந்த பில்போர்டின் நீளம் 17,000 சதுர அடியாக இருக்கும். குத்தகையில் பில்போர்டுகள் இந்த நிகழ்வுக்கு என்றே எடுக்கப்படுகிறது.

LED வெளிச்சத்தில் ராமரின் புகைப்படங்கள் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒளிபரப்பாகும்.

கடவுள் ராமரின் புகைப்படம் வீடியோவாகவும், 3D படங்களாகவும், கோயிலின் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு ஆகியவையும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் புகைப்படங்களும் ஒளிபரப்பப்படும்.

இதற்கென பல்வேறு பில்போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் இருக்கும் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமானது டைம் ஸ்கொயர்.

இந்தியர்கள் அன்று டைம் ஸ்கொயரில் கூடி இந்த நிகழ்வை கண்டு களிப்பார்கள். இனிப்புகள் வழங்கப்படும். இந்துக்கள் அனைவருக்கும் இந்த நாள் கனவு நாள். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read next: லெபனான் செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு