தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது

Feb 28, 2022 12:01 pm

தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் தமிழ்நாடு  அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை வென்றது.

தேசிய அளவிலான பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் திண்டுக்கல் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் ஆண், பெண் இருபாலாருக்குமான இரட்டையர்கள் கான ஆட்டம், மாற்று இரட்டையர்களான ஆட்டம் ஐவர்களுக்கான ஆட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கர்நாடகா, ஒடிசா ,மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் ஐவருக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடும் ஆந்திராவும் மோதின. இதில் தமிழ்நாடு அணியினர் சாம்பியன் பட்டம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர் வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி தாளாளர் ஆர் எஸ் கே ரகுராம்,, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, அகில இந்திய பூப்பந்தாட்ட கழக செயலாளர் ராஜாராவ், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக செயலாளர் எழிலரசன் திண்டுக்கல் மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் மருத்துவர் சீனிவாசன் பிஎஸ்என்எல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Read next: ஹீரோவும் நானே வில்லனும் நானே அடுத்த அதிரி புதிரி வெற்றிக்கு தயாராகும் அஜித்