தமிழ் நாட்டில் கோவிட் தொற்று தொடர்பான இன்றய தரவுகள்

1 week

இன்று புதிதாக 1725 தொற்றுகள் ஏற்பட்டதாக தமிழ் நாடு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது; இந்த புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 7,59916 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் நாடு சுகாதார குடும்ப நல்வாழ்வுத் துறை வெளியிட்ட தரவுகளின் படி 1,725 புதிய தொற்றுகள் ஏற்பட்டதாக இன்று 16 ஆம் திகதி அறிவித்துள்ளது. இதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 பேர் கோவிட் தாக்கி பலியாகி உள்ளார்கள். இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 11495 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 16 ஆம்  திகதி மொத்தம் 2,384 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அதே வேளை கோவிட் நோய் தொற்றில் இருந்து மீளாமல் உள்ளவர்களின் எண்ணிக்கை 15765 ஆக உள்ளது.

 இந்தியாவில் தேசிய அளவில் மொத்தம் 30548 புதிய தொற்றுகள் ஏற்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது, இதன் காரணமாக மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,65,478 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 435 புதிய கோவிட் மரணங்கள் பதிவாகிய காரணத்தால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,30,070 ஆக உயர்ந்துள்ளது.

Read next: 94.5 சதவீதம் திறன் கொண்ட அமெரிக்காவின் தடுப்பூசிக்கு 50 லட்சம் டோஸ்கள் ஆர்டர் கொடுத்த இங்கிலாந்து