தமிழ் நாட்டில் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்வு

2 weeks

இன்று தமிழ் நாடு மாநில சுகாதார திணைக்களம் அறிவித்த தகவலின் படி புதிதாக 1939 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை நோயில் இருந்து 7,25,258 பேர் மீண்டுள்ளார்கள் மேலும் இன்று ஒருநாள் மட்டும் 2572 குணமடைந்துளளர்கள்.

இருப்பினும் நோயின் தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகி உள்ளார்கள். இதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 11454 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை தற்பொழுதும் நோய் பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 17748 ஆக உள்ளது.

அதே வேளை இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மொத்தம் 44878 தொற்றுகள் பதிவாகி உள்ளது, இந்த புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 87,28,795 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் புதிதாக 547 பேர் கொரோனா தாக்கி பலியாகினர், இதன் காரணமாக மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,28,668 ஆக அதிகரித்தது.

மேலும் 4,747 அதிகரிப்புடன் தொற்றில் இருந்து இதுவரை மீளாமல் 4,84,547  பேர் உள்ளார்கள். நோயில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 81,15,580 ஆக உள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 49,079  வீடு செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

Read next: மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு வீதி நாடகம்.