தலிபான்களின் கொடூரமான கோர முகம்! தூக்கிலிட்டு துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுடும் பதரவைக்கும் காட்சி!!

Sep 14, 2021 03:33 pm

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அஷ்ரப் கனி அரசாங்கத்தில் பணியாற்றி, தங்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகளை வீடு வீடாக தேடி கண்டுபிடித்து தலிபான்கள் கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அந்த வகையில், முக்கிய மாகாணத்தின் பொலிஸ் அதிகாரியை பிடித்த தலிபான்கள், அவரை கொடூரமாக சுட்டுக்கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தலிபான் போராளிகள் இரண்டு பேரை துடி துடிக்க தூக்கிலிட்டு கொல்லும் ஈரக் குலையை நடுங்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவில், பாலைவனம் போன்ற இடத்தில் கட்டை கட்டி இரண்டு ஆண்களை துடி துடிக்க தூக்கிலிட்டு கொல்லும் தலிபான் போராளிகள், பின் உயிரற்று தொங்கும் சடலங்களை சுற்றி நின்று சரமாரியாக துப்பாக்கியால் சுடுகின்றனர்.

குறித்து வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது, கொல்லப்பட்டவர்கள் யார் போன்ற விவரங்கள் தெரியவில்லை.