ஆப்கானிஸ்தானின் தலைநகரில் முக்கிய நகரை கைப்பற்றிய தாலிபான்கள்

Aug 11, 2021 03:49 am

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து 140 மைல் வடக்கே முக்கிய நகரான புல்-இ-கும்ரியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

காபூலை வடக்கு மற்றும் மேற்குடன் இணைக்கும் ஒரு மூலோபாய சாலையை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தியதாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடும் சண்டையின் பின்னர் தலிபான்களிடம் இராணுவம் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புல்-இ-கும்ரி தலிபான்களிடம் வீழ்ந்தது, அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று ஒரு அதிகாரி தொலைபேசி பேட்டியில் கூறினார், 

டுவிட்டரில் தலிபான் செய்தித் தொடர்பாளர் பாக்லான், மாகாணத்தின் தலைநகரான நகரத்தைக் கைப்பற்றியதாகக் கூறினார். 

சமூக ஊடகங்களில் படங்களில், நகர வாயில்களில் தலிபான்களின் கொடியையும் நகருக்குள் கிளர்ச்சியாளர்களையும் காட்டின.

நகரின் தலிபான்களின் எழுச்சி ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு பாரிய அடியாகும்.

Read next: மீண்டும் வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய செய்தி