தை ஐந்தாம் நாள் ராசி

Jan 19, 2023 04:52 am

மேஷம் -ராசி: 

மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும்.

திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

அஸ்வினி : குழப்பம் குறையும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

 ரிஷபம் -ராசி:  

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

எதிர்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும்.

சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோக பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

கிருத்திகை : தாமதம் ஏற்படும். 

ரோகிணி : குழப்பம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம் -ராசி: 

புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்.

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.

உறவினர்களின் வருகையால் புத்துணர்ச்சி அடைவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

கடகம் -ராசி: 

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனதளவில் மாற்றம் ஏற்படும். ச

கோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

புனர்பூசம் : உதவி கிடைக்கும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : பயணங்கள் கைகூடும்.

 சிம்மம் -ராசி:  

மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தை உண்டாக்கும். பூ

ர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் ஏற்படும்.

உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

மகம் : தன்னம்பிக்கை பிறக்கும். 

பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

 கன்னி -ராசி: 

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வியாபாரம் நிமிர்த்தமான அறிமுகம் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

அஸ்தம் : நம்பிக்கை அதிகரிக்கும். 

சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

துலாம் -ராசி: 

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

புதிய தொழில்நுட்ப கருவிகளை பற்றிய புரிதல் உண்டாகும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

சித்திரை : புரிதல் உண்டாகும்.

சுவாதி : துரிதமான நாள்.

விசாகம் : மாற்றம் ஏற்படும்.

 விருச்சிகம் -ராசி: 

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் தனவரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வியாபாரம் நிமிர்த்தமான தடைகள் விலகும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

விசாகம் : தனவரவு கிடைக்கும்.

அனுஷம் : கவலைகள் குறையும்.

கேட்டை : சாதகமான நாள்.

தனுசு -ராசி: 

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும்.

வியாபாரம் சார்ந்த பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செயல்படவும்.

இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

செயல்பாடுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

மூலம் : கவனம் வேண்டும். 

பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

 மகரம் -ராசி: 

உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும்.

அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும்.

எதிர்பாலின மக்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.

எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட்டு முடிவு எடுக்கவும்.

பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

திருவோணம் : முதலீடுகள் மேம்படும்.

அவிட்டம் : பொறுமை வேண்டும்.

 கும்பம் -ராசி. 

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.

அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

எதிர்பாராத சில தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும்.

வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குழந்தைகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

அவிட்டம் : இழுபறிகள் நீங்கும்.

சதயம் : லாபம் உண்டாகும்.

பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும். 

 மீனம் -ராசி: 

காப்பீடு சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வீடு, மனை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம். 

பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.

உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். 

ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

Read next: ஏலத்திற்கு வந்துள்ள Twitter நிறுவனத்தின் பொருட்கள்