13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம் மோடி தெரிவிப்பு

3 weeks

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சமுத்திர பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் இந்தியாவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இதன்போது இணக்கம் காணப்பட்டதாக இந்தியப் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர், பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு தேவைகளுக்கும் அமைய தற்போது அமுல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்

Read next: 442 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம்