வித்தியாசமான முறையில் ராணிக்கு அஞ்சலி செலுத்திய சுவிட்சர்லாந்து ஒளிக்கலைஞர்..!

Sep 19, 2022 12:39 pm

மேகங்களையே திரையாக்கி பிரித்தானிய மகாராணியாருக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியுள்ளார் சுவிட்சர்லாந்து ஒளிக்கலைஞர் ஒருவர்.

உலக நாடுகள் பல, மறைந்த பிரித்தானிய மகாராணியாருக்கு பலவகையில் தங்கள் அஞ்சலியை செலுத்திவருகின்றன.

சுவிஸ் ஒளிக்கலைஞர் ஒருவர் வித்தியாசமாக தங்கள் நாட்டின் சார்பில் பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள விடயம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Image

நட்சத்திரங்களை நோக்கிப் பயணம் - சொர்க்கம் செல்லும் இங்கிலாந்து மகாராணியார் என்னும் தலைப்பில், மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் உருவங்களை வானில் ஒளிரச் செய்துள்ளார் Gerry Hofstetter என்னும் சுவிஸ் ஒளிக்கலைஞர்.

மேகங்களையே திரையாக்கி, அவற்றின் மீது ஒளியை விழச் செய்து இந்த விடயத்தை சாத்தியமாக்கியுள்ளார் அவர்.

இந்த Hofstetter, முன்பு பிரித்தானிய தூதரகத்துடன் பணி செய்தவர் என்பதும், மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலியின்போது, சுவிஸ் ஆல்ப்ஸ் மலையின் மீது பிரித்தானியா தொடர்பான உருவங்களை ஒளிரச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Read next: ராணியின் இறுதிச் சடங்கு - நேரலை